
அண்ணாமலை படத்துடன் வெட்டப்பட்ட ஆடு: விடியோவுக்கு தமிழக பாஜக கண்டனம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் படம் கழுத்தில் கட்டப்பட்ட நிலையில், நடுரோட்டில் ஆட்டை வெட்டிய விடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அதற்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
அண்ணாமலையின் படத்தை ஆட்டின் கழுத்தில் கட்டி, அதனை சாலையின் குறுக்கே படுக்கவைத்து வெட்டி, கோவையில் அண்ணாமலையின் தோல்வியைக் குறிக்கும் வகையில் சிலர் விடியோ வெளியிட்டிருந்தனர்.
ஆனால், இந்த விடியோ எங்கு எடுக்கப்பட்டது. அவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த விடியோவை, தமிழக பாஜக துணைத் தலைவரும் செய்தித் தொடர்பாளருமான நாராயண் திருபாதி, தனது எக்ஸ் பக்கத்தில் அந்த விடியோவை பகிர்ந்து கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அண்ணாமலைக்கு எதிராகக் குரல்கொடுத்துக் கொண்டு நடுரோட்டில் வைத்து ஆட்டை வெட்டி விடியோ பதிவிட்டுள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் பாஜக வளர்வது அரசியல் கட்சியினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத் தான் இந்தநடவடிக்கை மூலம் தெரிய வருகிறது. இது மிகவும் தரம் தாழ்ந்த அரசியல் என்று பதிவிட்டுள்ளார்.
இந்த விடியோவில், சின்ன சின்ன குழந்தைகள் அண்ணாமலைக்கு எதிராகக் கோஷம் எழுப்புவதும் பதிவாகியிருக்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.