ஓபிஎஸ்ஸுக்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை: கே.பி.முனுசாமி

”ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையோடு கைகோர்த்தவர் ஓபிஎஸ்.”
அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர் சந்திப்பு
அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர் சந்திப்பு
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி: அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இணைவோம் என்று சொல்வதற்கு ஓ.பன்னீர்செல்வதிற்கு எந்த ஒரு தார்மிக உரிமையும் இல்லை என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர் சந்திப்பு
அதிமுகவை ஒற்றுமையால் மீட்டெடுப்போம்: ஓபிஎஸ்

கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது :

அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்தபோது அதற்கு முக்கிய கருவியாக இருந்து அதிமுகவிற்கு மேலும் மேலும் சோதனைகளை கொடுத்தவர் ஓ பன்னீர்செல்வம். அதிமுக தொண்டர்கள் கோயிலாக வணங்கும் அதிமுக தலைமை கழக அலுவலகத்தை குண்டர்கள் உதவியோடு சூறையாடிச் சென்றவர் ஓ பன்னீர்செல்வம். அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையோடு கைகோர்த்துக்கொண்டு தன் சுயநலத்திற்காக அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர் தான் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக கட்சி முடக்க முயற்சித்த ஓ பன்னீர்செல்வத்திற்கு அனைவரும் ஒன்றிணைவோம் என அழைப்பு விடுப்பதற்கு எந்த ஒரு அருகதையும் இல்லை.

சசிகலா அழைப்பு விடுத்து 24 மணி நேரம் கடந்தும் யாராவது சென்று இருக்கிறார்களா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தற்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக 2019 ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும் கூடுதலாக 2 சதவீதம் பெற்றுள்ளது. ஆனால், திமுக 6 சதவிகிதம் வாக்கை இழந்துள்ளது .

2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி பெற்று எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்கும்” என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com