ஜெயக்குமார் (கோப்புப்படம்)
ஜெயக்குமார் (கோப்புப்படம்)

வேலுமணி பேசியதற்கும், கட்சிக்கும் சம்பந்தமில்லை - ஜெயகுமார்

Published on

வேலுமணி பேசியதற்கும், கட்சிக்கும் சம்பந்தமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இனிமேல் இலையும் தண்ணீரும் ஒட்டாது. கெட் அவுட் என பாஜகவை நாங்கள்தான் வெளியேற்றினோம். அனுமானத்தின் அடிப்படையில் வேலுமணி பதில் கூறியிருக்கிறார். அவர் பேசியது அவருடைய நிலைப்பாடு. கட்சிக்கும் அதற்கும் சம்பந்தம் கிடையாது. ஆர்சிபி அணி போல தமிழ்நாட்டில் பாஜக தோற்றுக் கொண்டே இருக்கிறது.

சிஎஸ்கே அணி போன்று இன்னும் பல வெற்றிகளை குவிக்க காத்திருக்கும் கட்சி அதிமுக என்றார். முன்னதாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. கடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்திருந்தாலும், அடுத்து பல வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 19.3% வாக்குகள் அதிமுக பெற்றது. இந்த தேர்தலில் 20.4 சதவீத வாக்குகள் பெற்றதன் மூலம், தற்போது வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக அரசில் செயல்படுத்தி உள்ளது. தொடர்ந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு அதிமுக செயல்படும் என்றார்.

அண்ணாமலை பாஜக தலைவர் ஆனது முதல் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு, பிளவுற்றுள்ளது என் குற்றம் சாட்டினார். பாஜக அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டு இருந்தால் 30 முதல் 35 இடங்களை வென்றிருக்க முடியும் என்றார். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிலையில் வேலுமணி கூறியது அவரது சொந்த கருத்து என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com