ஐஐடிகளில் நடந்த தற்கொலைகள்: அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்

ஐஐடிகளில் நடந்த தற்கொலைகள் குறித்து வெளியான புள்ளிவிவரம்
ஐஐடி
ஐஐடி
Published on
Updated on
1 min read

நாட்டின் மிகப்பெரிய மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்கள் என பெயர் பெற்ற ஐஐடி-க்கள் மாணவர்களின் தற்கொலையிலும் முதல் இடத்தில் உள்ளன.

நாடு முழுவதும் 23 இந்திய தொழில்நுட்ப கல்வி மையங்கள் எனப்படும் ஐஐடிக்கள் உள்ளன. இவற்றில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 37 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்கிறது தரவுகள்.

11 ஐஐடிகளில் தில்லியைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் உள்பட 37 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

கடந்த 2019 - 20 ஆம் கல்வியாண்டு முதல் 2023 - 24ஆம் கல்வியாண்டு வரை 11 ஐஐடிக்களில் 37 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். இதில், தலா 7 தற்கொலைகள் ஐஐடி ஹைதராபாத் மற்றும் ஐஐடி சென்னையில் நிகழ்ந்துள்ளது. ஐஐடி தில்லியில் ஆறு மாணவர்கள் தற்கொலை நிகழ்ந்திருக்கிறது.

ஐஐடி
உள்ளபடியே மக்கள் யார் பக்கம்?

ஐஐடி புவனேஸ்வரத்தில் நான்கும், ஐஐடி கான்பூர், கராக்பூரில் தலா மூன்று தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. ஐஐடி மும்பை, தன்பாத்தில் தலா இரண்டு தற்கொலை பதிவாகியிருக்கிறது. ரூர்கி, தார்வாத், காந்திநகர் ஐஐடிகளில் தலா ஒரு தற்கொலை பதிவாகியிருக்கிறது.

ஆனால், கோவா, பிலால், ஜம்மு, பாட்னா போன்ற 12 ஐஐடிகளில் இதுபோன்ற தற்கொலைச் சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

37 மாணவர்கள் தற்கொலை என்பது மிகப்பெரிய எண்ணிக்கை. ஏற்கனவே நுழைவுத் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் மாணவர்கள் தற்கொலை ஒருபக்கம் அதிகரித்திருப்பதும், மற்றொரு பக்கம் உயர்கல்வியில் சேர்ந்து அங்கு கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும், உடனடியாக மாணவர்களின் மனநலனைக் காக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

ஐஐடி
ராமநாதபுரத்தில் 'டம்மி' பன்னீர்செல்வங்கள் நிகழ்த்திய சாதனைதான் என்ன?

கடந்த ஆண்டு மாநிலங்களவையில், கல்வித் துறை இணை அமைச்சர் அளித்த தகவலில், கல்வி நிலையங்களில் பாடப்பிரிவுகளால் ஏற்படும் அழுத்தம், குடும்ப மற்றும் சொந்தக் காரணங்களால் மாணவர்களின் தற்கொலைகள் நிகழ்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், உலகிலேயே, 15 - 29 வயதுக்குள்பட்ட இளையோர் தற்கொலை சம்பவங்கள் இந்தியாவில்தான் அதிகம். அதிலும், உலகின் சராசரியான 13 சதவீதத்தைக் காட்டிலும் இந்திய சராசரி 25 ஆக உள்ளது. இந்த இளைஞர்களில், நாட்டில் உள்ள மிக முன்னணி கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் இடம்பெற்றிருப்பது மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com