தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பிலிப்பின்ஸ் நாட்டு காதலியை தமிழ் பாரம்பரிய முறைப்படி கரம் பிடித்த இளைஞர்

News image
Updated On :10 ஜூன் 2024, 7:34 am

DIN

10-ஆண்டு காதலித்த பிலிப்பின்ஸ் நாட்டு காதலியை தமிழ் பாரம்பரிய முறைப்படி புதுச்சேரி இளைஞர் மணமுடித்தார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் வெங்கட்ராம். பி.டெக்., படித்த இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிவதற்காக பிலிப்பின்ஸ் நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கேயே தங்கி பணிபுரிந்தும் வந்தார். அப்போது பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த கிலேசி பெத் சிம்பானன் ஓபா, என்ற பெண்ணுடன் வெங்கட்ராமுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு இருவரும் கடந்த 10 வருடமாக காதலித்து வந்தனர்.

பின்னர் பணி முடிந்து வெங்கட்ராம் மீண்டும் சொந்த ஊரான புதுச்சேரிக்கு திரும்பினார். ஆனாலும் இரண்டு பேரும் தொலைபேசி மூலம் பேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவரும் காதலிப்பதை தங்களது வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர். இதற்கு இரு விட்டார்களும் சம்மதமும் தெரிவித்தனர்.

இதனையடுத்து பத்தாண்டு காதல் வாழ்க்கை திருமண வாழ்க்கையாக முடிவு செய்யப்பட்டு புதுச்சேரியைச் சேர்ந்த வெங்கட்ராமுக்கும் பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த கிலேசி பெத் சிம்பானன் ஓபா-வுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி இன்று புதுச்சேரி முத்தியால்பேட்டை அருள்மிகு பொன்னு மாரியம்மன் ஆலயத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இதில் மணப்பெண் தமிழ் முறைப்படி கூறை சேலை கட்டி, புரோகிதர் வைத்து மந்திரங்கள் ஓத சாஸ்திரம் சம்பரதாயத்துடன் திருமணம் நடைபெற்றது. இதில் இரு விட்டார்கள் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு தாம்பலமும் வழங்கப்பட்டது. பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்து பெண்ணின் உறவினர்கள் திருமணத்தை காணும் வகையில் இணையதளம் மூலமாக நேரடி காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.