அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நாடாளுமன்ற திமுக தலைவராக கனிமொழி!

மக்களவைக் குழு தலைவராக பொருளாளர் டி.ஆர். பாலு நியமிக்கப்பட்டுள்ளார்.

News image
- படம் | ஏஎன்ஐ
Updated On :10 ஜூன் 2024, 4:19 pm

DIN

நாடாளுமன்ற திமுக குழு தலைவராக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் கனிமொழி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் மக்களவை - மாநிலங்களவை ஆகிய இரு அவைகளுக்கும் சேர்த்து திமுக நாடாளுமன்ற குழு தலைவராக கனிமொழி செயல்படவுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மக்களவைக் குழு தலைவராக, பொருளாளர் டி.ஆர். பாலு நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்களவைக் குழு துணைத் தலைவராக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் நியமனம்.

மக்களவை கொறடாவாக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா நியமனம்.

மாநிலங்களவைக் குழு தலைவராக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா,

மாநிலங்களவைக் குழு துணைத்தலைவராக தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம்,

மாநிலங்களவை கொறடாவாக சட்டத் தலைமை ஆலோசகர் பி.வில்சன்,

இரு அவைகளின் பொருளாளராக கொள்கை பரப்புச் செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.