செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

பள்ளி திரும்பும் குழந்தைகளுக்கு வாழ்த்துகள்: முதல்வர் ஸ்டாலின்

கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்துப் பள்ளிகளும் இன்று திறப்பு.

News image

கோப்புப்படம்

Updated On :10 ஜூன் 2024, 5:28 am

DIN

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி திரும்பும் குழந்தைகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பள்ளி இறுதி தோ்வுகளுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டது. மக்களவைத் தோ்தல் நடவடிக்கைகள், முடிவுகளுக்குப் பிறகு ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மாணவா்களின் நலன்கருதி, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஜூன் 6-க்கு பதிலாக, ஜூன் 10-ஆம் தேதி அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது:

“கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்.

பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை - உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.