மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இனி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கவே மாட்டேன்: அண்ணாமலை

“பாஜக அலுவலகங்களில் மட்டுமே செய்தியாளர்களை சந்திப்பேன்.”

News image
கோவை விமான நிலையத்துக்கு வருகை தந்த அண்ணாமலை
Updated On :11 ஜூன் 2024, 10:58 am

DIN

கோவை: இனிமேல் விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன் என்று தமிழக பாஜக கே. அண்ணாமலை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

தில்லியில் நடைபெற்ற பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் மற்றும் மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று கோவை விமான நிலையத்துக்கு வருகை தந்த அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயற்சித்தனர்.

அப்போது, இனிமேல் விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன், பாஜக அலுவலகங்களில் மட்டுமே பேட்டி அளிப்பேன், முறைப்படி 24 மணிநேரத்துக்கு முன்னதாகவே செய்தியாளர்கள் சந்திப்புக்கான தகவல் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிட்ட 39 மக்களவைத் தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, திமுக வேட்பாளரிடம் 1.18 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.