விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக தேர்தல் பணிக்குழு!
விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழுவை திமுக அறிவித்துள்ளது.


விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழுவை திமுக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நடைபெற வேண்டிய பணிகளை கவனிக்க தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தேர்தல் பணிக்குழு
திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி
கொள்கை பரப்புச் செயலாளர் எஸ். ஜெகத்ரட்சகன்
காணை மத்திய ஒன்றியம் : மாண்புமிகு கே.என்.நேரு,
விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியம் : எ.வ.வேலு
விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியம் : எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
காணை வடக்கு ஒன்றியம் ஒன்றியம் : அர. சக்கரபாணி
கோலியனூர் மேற்கு ஒன்றியம் : தா.மோ.அன்பரசன்
விக்கிரவாண்டி மத்திய ஒன்றியம் : எஸ்.எஸ்.சிவசங்கர்
விக்கிரவாண்டி பேரூர் : சி.வி.கணேசன்
காணை தெற்கு ஒன்றியம் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டாக்டர் ஆர். லட்சுமணன், எம்.எல்.ஏ. ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜூன் 14ஆம் தேதி மாலை, விக்கிரவாண்டியில் உள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் மேலே குறிப்பிட்ட தேர்தல் பணிக்குழுவினர் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...