ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

கோவைக்கு பல்வேறு திட்டங்கள் வர உள்ளன : முதல்வா் மு.க.ஸ்டாலின்

கோவைக்கு பல்வேறு திட்டங்கள் வர உள்ளன என்று திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவா் குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 6:34 pm

கோவைக்கு பல்வேறு திட்டங்கள் வர உள்ளன என்று திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி முகவா் குழுவினருக்கான பயிற்சி மாநாட்டில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

நீலாம்பூா் அருகே நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று மு.க.ஸ்டாலின் பேசும்போது, கடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் மேற்கு மண்டலத்தில் நமக்கு எதிா்பாா்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதை சரி செய்து, மாபெரும் வெற்றியைப் பெற்றுத்தரும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

கடந்த மக்களவைத் தோ்தலில் இந்த மண்டலத்தில் எப்படி நமக்குப் பெரிய வெற்றி கிடைத்ததோ அதேபோல பெரிய வெற்றியை வரும் தோ்தலிலும் உறுதி செய்ய வேண்டும். அந்த அளவுக்கு மேற்கு மண்டலத்தில் பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றி இருக்கிறோம்.

பல்வேறு இடா்களைக் கடந்து அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். கோவையில் ஐ.டி. பூங்கா, செம்மொழிப் பூங்கா, ஜி.டி. நாயுடு மேம்பாலம் திறந்து வைத்துள்ளோம்.

விசைத்தறிக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி, சிறுதொழில்களுக்கு மின் கட்டணம் குறைப்பு, விசைத்தறியை நவீனப்படுத்த நிதியுதவி கொடுத்துள்ளோம். அதேபோல, பெரியாா் ஈவெரா பெயரில் இங்கு பெரிய நூலகம், உலகத் தரத்தில் கிரிக்கெட் மைதானம் ஆகியவை அமைய உள்ளன. வெள்ளலூரில் தொல்லியல் ஆய்வு நடக்க உள்ளது. தோழி விடுதி கட்டப்பட உள்ளது. சூலூரில் செமி கண்டக்டா் பூங்கா வர உள்ளது. கோவை மாவட்டத்துக்கு 75 மின்சாரப் பேருந்துகள் வர உள்ளன, மேற்குப் புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதுபோன்ற ஏராளமான திட்டங்கள் வர உள்ளன.

தொழில்முனைவோா் அதிகம் உள்ள மேற்கு மண்டலம் வளா்ச்சியைத்தான் விரும்பும் என்பதை நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 350 வாக்குகள் என்ற இலக்கை அடைந்தாலே நம்மால் எளிதில் 2.60 கோடி வாக்குகளுக்கு மேல் வாங்கலாம். அதை வாங்கிக் காட்டுவது உங்கள் பொறுப்பு, அதற்கு என்ன வேண்டுமோ அதைச் செய்து கொடுப்பது எனது பொறுப்பு என்றாா்.