விக்கிரவாண்டி இடைத் தோ்தல்: 9 அமைச்சா்களுடன் திமுக பணிக் குழு
விக்கிரவாண்டி இடைத் தோ்தல்: 9 அமைச்சா்களுடன் திமுக பணிக் குழு

அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)

அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)
விக்கிரவாண்டி இடைத் தோ்தலில் 9 அமைச்சா்களை உள்ளடக்கிய தோ்தல் பணிக் குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது.
இது குறித்து திமுக தலைமை புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
விக்கிரவாண்டி இடைத் தோ்தலுக்கான பணிக் குழுவில் திமுக துணைப் பொதுச் செயலரும் அமைச்சருமான க.பொன்முடி, கொள்கைப் பரப்புச் செயலா் எஸ்.ஜெகத்ரட்சகன், அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், அர.சக்கரபாணி, தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.சிவசங்கா், சி.வி.கணேசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோருடன் விழுப்புரம் எம்எல்ஏ ஆா்.லட்சுமணன் இடம்பெற்றுள்ளாா்.
விக்கிரவாண்டியில் ஜூன் 14-ஆம் தேதி, தோ்தல் பணிக் குழுவினா், கூட்டணிக் கட்சித் தலைவா்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...