திருப்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்த நிலையில் பள்ளியில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
சிறுத்தையை தேடும் பணி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மூன்று நாள்களுக்கு இங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்ற போதிலும் எந்தவொரு பள்ளி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிகாரியின் கூறுகையில், ”மாலை 4 மணியளவில் தனது பிள்ளைகளை அழைத்துச் செல்ல பள்ளிக்கு வந்த பெற்றோர்கள், ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் சிறுத்தை இருப்பதைக் கவனித்தார்.
உடனடியாக இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளி மாணவிகளை பத்திரமாக வெளியேற்றினர்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கே.தர்ப்பகராஜ், காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மற்றும் வனத் துறை ஊழியர்களுடன் பள்ளிக்கு விரைந்து வந்து நடவடிக்கையை ஒருங்கிணைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தார்.
இதனிடையே சிறுத்தை தாக்கியதில் ஒருவர் காயமடைந்த கோபால் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.தர்ப்பகராஜ் கூறுகையில், “சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்து, உன்னிப்பாகக் கண்காணித்து வரும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் உதவியுடன் சிறுத்தையைப் பிடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளுக்கும் மூன்று நாள்கள் விடுமுறை விட மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், இந்த காலகட்டத்தில் பள்ளி வளாகத்தில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது. சிறுத்தை தாக்கிய நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்றார்.
வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், சிறுத்தையைப் பிடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஓசூரில் இருந்து கால்நடை மருத்துவக் குழுவினர் வந்ததும், கூண்டு அமைத்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும். அதன் பிறகு, சிறுத்தை பாதுகாப்பாக வனப்பகுதிக்கு மாற்றப்படும்'' என்றார்.
மேலும், சிறுத்தை ஒரு கார் ஷெட்டுக்குள் புகுந்த போது அங்கிருந்த 2 காரில் 6 மணி நேரமாக சிக்கியிருந்த 5 பேரையும் வனத்துறையினர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் 313 தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருப்பத்தூரில் காவல் குறைதீா் கூட்டம்
தஞ்சாவூா் தோ் திருவிழாவுக்காக ஏப். 27-இல் உள்ளூா் விடுமுறை

ஏப்.23-இல் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கட்டாய விடுமுறை!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை


