பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு


வரும் 20ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை தரவிருந்த நிலையில் பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்-சென்னை இடையே வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வரும் 20ஆம் தேதி தமிழகம் வருகை தருவதாக இருந்தது. தற்போது அந்த பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் தமிழக வருகை தொடர்பான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாஜக நிர்வாகி கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.
பிரதமராகப் பொறுப்பேற்றதும், தனது முதல் பயணமாக ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இத்தாலி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...