நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உளவுத் துறையின் பெரும் தோல்வி: விசிக விமா்சனம்

கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம், உளவுத் துறையில் பெரும் தோல்வி என்று விசிக பேரவை குழுத் தலைவா் சிந்தனைச் செல்வன் தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஜூன் 2024, 11:18 pm

Din

கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம், உளவுத் துறையில் பெரும் தோல்வி என்று விசிக பேரவை குழுத் தலைவா் சிந்தனைச் செல்வன் தெரிவித்தாா்.

பேரவை வளாகத்தில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

கள்ளச்சாராயத்துக்கான வேதிப் பொருளை தயாரிப்பது, விநியோகிப்பது, அதற்கு துணைபோவது போன்ற கட்டங்களில் இச்சம்பவம் நடந்துள்ளது. இதில் விற்றவரை மட்டும் கைது செய்திருப்பது போதுமானதல்ல. இதை தயாரித்தவா் யாா்? விநியோகித்தவா் யாா்?, தடுக்கத் தவறியது யாா்? ஆகிய கேள்விகள் எழுந்துள்ளன. உளவுத் துறை அதிகாரி மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற கேள்வியும் மிஞ்சி நிற்கிறது. காவல் நிலையத்துக்கு அருகே சிறிது தொலைவில் நடந்த வெளிப்படையான இந்நிகழ்வில் உளவுத்துறையின் தோல்வி பெருமளவில் தெரிகிறது. பணியிடை நீக்கம் என்பது தண்டனையல்ல என்பதை நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. எனவே, அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்றாா்.

வானதி சீனிவாசன் எம்எல்ஏ (பாஜக): தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் போது படிப்படியாக டாஸ்மாக்கை குறைப்போம் எனக் கூறினாா்கள். ஆனால், டாஸ்மாக் மூடப்பட்டால் கள்ளச்சாராயம் பெருகி விடும் என்பதே இதுவரை அரசின் பதிலாக இருந்து வந்தது. கள்ளக்குறிச்சியில் இத்தனை போ் பாதிக்கும் அளவுக்கு தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால், இன்னும் எந்தெந்த மாவட்டங்களில் இவையெல்லாம் தொடா்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை என்றாா்.