ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கள்ளச்சாராய மரணம்: தேமுதிக போராட்டம் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தைக் கண்டித்து தேமுதிக சார்பில் ஜூன் 25-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

News image
பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப்படம்)
Updated On :21 ஜூன் 2024, 11:12 am

DIN

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தைக் கண்டித்து தேமுதிக சார்பில் ஜூன் 25 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பு:

திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பாக (ஜூன் 25) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது.

இதில் மாவட்ட கழக செயலாளர்கள், உயர் மட்ட குழு உறுப்பினர்கள், அனைத்து ஒன்றிய நகர பேரூர் கழக கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி, பொதுமக்கள் என அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தித் தர வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.