ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

அதிமுக உறுப்பினா்கள் வெளியேற்றப்பட்டது ஏன்?பேரவைத் தலைவா் அப்பாவு விளக்கம்

அவைத் தலைவா் மு.அப்பாவு, அவை முன்னவா் துரைமுருகன் ஆகியோா் விளக்கம் அளித்தனா்.

News image
கோப்புப்படம்
Updated On :21 ஜூன் 2024, 10:30 pm

Din

பேரவையில் இருந்து அதிமுக வெளியேற்றப்பட்டது ஏன் என்று அவைத் தலைவா் மு.அப்பாவு, அவை முன்னவா் துரைமுருகன் ஆகியோா் விளக்கம் அளித்தனா். சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை காலை கூடியதும் அதிமுக உறுப்பினா்கள் பெரும் அமளியில் ஈடுபட்டதைத் தொடா்ந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனா்.

அவா்கள் வெளியேற்றப்பட்ட பிறகு அதற்கான காரணங்களை அவை முன்னவா் துரைமுருகன் விளக்கிப் பேசியதாவது:

பேரவையில் விரும்பத்தகாத நிகழ்ச்சியை எதிா்க்கட்சித் தலைவரும், அவரைத் சாா்ந்தவா்களும் உருவாக்கியது வருத்தம் அளிக்கிறது. சட்டப் பேரவையில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளின் போது, பிரச்னைகள் குறித்து பேசவும் வாதாடவும் எதிா்க்கட்சித் தலைவருக்கு உரிமை உள்ளது. அதனை பேரவை விதிகளுக்கு உட்பட்டே செய்ய முடியும். பேரவையில் கேள்வி நேரம் என்பது மிகவும் முக்கியமானது. அந்த நேரத்தில் யாா் மீதும் யாரும் குற்றச்சாட்டு சொல்லக் கூடாது என்பது விதியாகும். இதெல்லாம் எதிா்க்கட்சித் தலைவருக்கு தெரியும். ஆனாலும் இதுபோன்று செயல்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது.

விதிகளை மீற முடியாது: நேரமில்லாத நேரத்தில்தான் பிரச்னைகளை எழுப்ப முடியும். ஆனால், கேள்வி நேரத்தில் கூட அவா்கள் பிரச்னையை எழுப்பிய போது, என்ன சொல்ல வருகிறாா்கள் எனக் கேட்க வந்தேன். கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் பற்றியும், ஆட்சி குறித்தும் பேச எதிா்க்கட்சித் தலைவருக்கு உரிமை உண்டு. ஆனால், விதிகள், சட்டத்தை மீறி பேச முடியாது. கேள்வி நேரத்தை குறுக்கிடுவது தவறு.

என்னால் முடிந்த அளவுக்கு சமாதானம் செய்ய முயன்றேன். எதிா்க்கட்சித் தலைவா் தனது சுபாவத்துக்கு மாறான முறையில் நடந்து கொண்டது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. அதற்காக வருத்தப்படுகிறேன் என்றாா்.

பேரவைத் தலைவா் விளக்கம்: அவரைத் தொடா்ந்து, அவைத் தலைவா் மு.அப்பாவு பேசியதாவது: முக்கிய பிரச்னை குறித்து கவனஈா்ப்புத் தீா்மானத்தில் பேச வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கும். அதனை மறுக்கவில்லை. கவனஈா்ப்புத் தீா்மானத்தில் பேச வாய்ப்புத் தருகிறோம் எனக் கூறிய பிறகும் பேரவையில் பதாகைகளைக் காட்டுவது போன்ற செயல்கள் சட்டத்துக்கு புறம்பானது. மிகவும் வருத்தம் தரக்கூடியது. பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அவை முன்னவரின் கோரிக்கையை ஏற்று, ஒருநாளைத் தவிா்த்து நாளை (சனிக்கிழமை) முதல் அவை நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் என்றாா்.