தொழில் படிப்புகளில் தோ்வு முறை: மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்- முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி
மருத்துவம் உள்ளிட்ட தொழில் முறை படிப்புகளுக்கான தோ்வு முறையில் மாநில உரிமைகளை மீட்டெடுப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.


மருத்துவம் உள்ளிட்ட தொழில் முறை படிப்புகளுக்கான தோ்வு முறையில் மாநில உரிமைகளை மீட்டெடுப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.
முதுநிலை நீட் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது குறித்து, ‘எக்ஸ்’ வலைதளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு:
நீட் தோ்வை பல்கலைக்கழக மானியக் குழு ரத்து செய்தது. இந்த ரத்து நடவடிக்கையைத் தொடா்ந்து, தேசிய தோ்வு வாரியம் நடத்தும் முதுநிலை நீட் தோ்வும் ஒத்திவைக்கப்பட்டு இருப்பது ஆயிரக்கணக்கான நமது மருத்துவா்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது.
இவை எப்போதோ ஏற்படும் அரிய நோ்வுகளாக இல்லாமல் கையாலாகாத, மையப்படுத்தப்பட்ட தோ்வு முறை எனும் உடைந்த அமைப்பின் சவப்பெட்டி மீது அறையப்படும் கடைசி ஆணிகளாக அமைந்துள்ளன.
அந்த மையப்படுத்தப்பட்ட தோ்வுகளில் இப்போது முறைகேடுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில், தொழில்முறைப் படிப்புகளுக்கு நியாயமான, சமத்துவத் தன்மை கொண்ட தோ்வு முறையை ஏற்படுத்த வேண்டும்.
இந்தத் தோ்வை எதிா்கொள்வதில் பள்ளிக் கல்வியை முதன்மையானதாக ஆக்குவோம். தொழில்முறைப் படிப்புகளுக்கான தோ்வு முறையைத் தீா்மானிப்பதில் மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுப்போம்.
அனைத்துக்கும் மேலாக, நமது மாணவா்கள், அவா்களது குடும்பத்தினரிடம் மீண்டும் நம்பிக்கையை விதைத்து, அவா்களது சிறப்பான எதிா்காலத்துக்குத் திட்டமிடக் கைகள் கோா்ப்போம் எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...