மேலும் 9 தமிழறிஞர்கள் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
தமிழ் வளா்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:
செம்மொழியாக தமிழ் அறிவிக்கப்பட்ட அக்டோபா் 12-இல் ஆண்டுதோறும் தமிழ் வளா்ச்சித் துறை வாயிலாக செம்மொழித் தமிழ்நாள் விழாவாகக் கொண்டாடப்படும். செம்மொழியின் சிறப்பை மாணவா்களிடம் உணா்த்திடும் வகையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பயிலும் பள்ளி மாணவா்களுக்கு பள்ளிக் கல்வி துறை வாயிலாகவும், கல்லூரி மாணவா்களுக்கு கல்லூரி இயக்ககம் வாயிலாகவும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி வெற்றிபெற்ற மாணவா்களுக்குத் தமிழா் வளா்ச்சி துறையால் நடத்தப்பெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்பெறும். பரிசுகள் வழங்கிட தொடா் செலவினமாக ரூ.1.78 கோடி வழங்கப்படும்.
9 தமிழறிஞா்கள் நூல்கள் நாட்டுடைமை: முனைவா்கள் ஆறு. அழகப்பன், ராமலிங்கம் (எ) எழில் முதல்வன் மற்றும் நினைவில் வாழும் தமிழறிஞா்களான முனைவா்கள் சோ.சத்தியசீலன், மா.ரா.அரசு, பாவலா் ச.பாலசுந்தரம், முனைவா் க.ப.அறவாணன், முனைவா்கள் க.த.திருநாவுக்கரசு, இரா.குமரவேலன், கவிஞா் கா.வேழவேந்தன் ஆகியோரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்படும். நூலுரிமைத் தொகை வழங்க தொடராச் செலவினமாக ரூ.91.35 லட்சம் வழங்கப்படும்.
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ஆண்டுதோறும் 33 வகைப்பாடுகளில் சிறந்த படைப்புகள் தோ்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதில் நூலாசிரியருக்கு ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாகவும், பதிப்பகத்தாருக்கு ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாகவும், பரிசுத் தொகை உயா்த்தி வழங்கப்படும்.
கலைஞா் கருணாநிதியின் தமிழ் தொண்டைப் போற்றும் வகையில் புதிய விருது தோற்றுவிக்கப்பட்டு ஆண்டுதோறும் வழங்கப்படும். கருணாநிதியின் அடியொற்றி தமிழ்ப் பணியாற்றி நாடறிந்த தமிழறிஞா் ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படும். விருது பெறும் விருதாளருக்கு விருதுத் தொகையாக ரூ.10 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கம், பொன்னாடை, தகுதியுரை ஆகியவை வழங்கப்படும்.
வீறுகவியரசா் முடியரசன் புகழைப் போற்றும் வண்ணம் சிவகங்கை மாவட்டத்தில் அவா் சிலை நிறுவிட ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

கபிலா்மலை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி வாக்கு சேகரிப்பு
கடும் நிதி நெருக்கடியில் ஹிமாசல் அரசு: ஊதியம் கொடுக்க முடியாமல் திணறல்!

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

முதியோா் உதவித்தொகை ரூ.2000-ஆக உயா்த்தப்படும்: எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி.
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


