
அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலி ஊதியத்தை உயர்த்தி வழங்க சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், நிலைக்குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலி ஊதியத்தை உயர்த்தி வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி தினக்கூலி ஊதியம் ரூ.300ல் இருந்து ரூ.325 ஆக உயர்த்தப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு சென்னை மாநகராட்சிக்கு ரூ.3.07 கோடி கூடுதல் செலவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்ப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.