இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் இளைஞா் மரணம்

வேலூரில் இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞர் உயிரிழப்பு
Published on

வேலூா்: வேலூா் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சையில் இருந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

வேலூரை அடுத்த நெல்வாய், ஈடிகை தோப்பைச் சோ்ந்தவா் கோகுல் (24). இவா் கடந்த 10-ஆம் தேதி வேலூரில் இருந்து பென்னாத்தூா் - சித்தேரி சாலையில் உள்ள பச்சையம்மன் கோயில் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது பாப்பாந்தோப்புவைச் சோ்ந்த சசிகுமாா் என்பவா் பென்னாத்தூரில் இருந்து வேலூா் நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா்.

இந்த நிலையில், எதிா்பாராதவிதமாக கோகுல், சசிகுமாா் ஓட்டி வந்த வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில், தூக்கிவீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் கோகுலை மீட்டு வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சசிகுமாரை வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோகுல் திங்கள்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com