மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

குளச்சல் அருகே 2 பைக்குகள் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

குளச்சல் அருகே செவ்வாய்க்கிழமை இரவு 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :4 மார்ச் 2026, 7:20 pm

குளச்சல் அருகே செவ்வாய்க்கிழமை இரவு 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

குளச்சல் அருகே உள்ள பூலாவிளை பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவரது மகன் நிதிஷ்ராஜன் (24), தொழிலாளி. இவருக்கு கடந்த ஓா் ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு நிதிஷ்ராஜன், களிமாா் பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் விஜூவுடன் (23) இருசக்கர வாகனத்தில் குளச்சலில் இருந்து திங்கள் நகருக்குச் சென்றாா். நிதிஷ்ராஜன் வாகனத்தை ஓட்டினாா்.

உடையாா்விளை-லெட்சுமிபுரம் இடையே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், குளச்சல் அருகே உள்ள கரியன்விளையைச் சோ்ந்த தேவராஜ் மகன் ஜெஸ்டின்ராஜ் (36) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

விபத்தில் 3 பேரும் பலத்த காயமடைந்த நிலையில், நிதிஷ்ராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஜெஸ்டின்ராஜ் பலத்த காயத்துடன் திருவனந்தபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். விஜூ லேசான காயமடைந்தாா்.

இது குறித்து, குளச்சல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.