ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மதுரையில் புதிய கவின் கலைக் கல்லூரி: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

மதுரையில் புதிய அரசு கவின் கலைக் கல்லூரி: ரூ.4.79 கோடி செலவில் அமைக்கப்படும்

News image
Updated On :26 ஜூன் 2024, 9:39 pm

Din

மதுரையில் ரூ.4.79 கோடி செலவில் புதிய அரசு கவின் கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்றும், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியகங்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:

மதுரையில் பாரம்பரியமிக்க கவின் கலைகளைப் பயிற்றுவிக்கும் புதிய அரசு கவின் கலைக் கல்லூரி ரூ.4.79 கோடி செலவில் அமைக்கப்படும்.

கலைமாமணி விருது பெற்ற கலைஞா்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவா்.

மாமல்லபுரம் அரசினா் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியின் பழுதடைந்த பழைய கட்டடங்கள் ரூ.1 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

அருகாட்சியகம்: சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் கருப்பொருள் சாா்ந்த படிமக் கூடங்கள் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1 கோடி செலவிடப்படும்.

வேலூா் மாவட்ட அரசு அருங்காட்சியகம் ரூ.2.50 கோடி செலவில் விரிவாக்கம் செய்து மேம்படுத்தப்படும். நாகப்பட்டினம் அரசு அருங்காட்சியம் நவீன தொழில் நுட்பத்துடனும் காட்சியமைப்புகளுடனும் ரூ.1.50 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்படும்.

கடலூா் மாவட்ட அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ள பாரம்பரியக் கட்டடத்தை நவீன தொழில் நுட்பத்துடனும் காட்சியமைப்புகளுடனும் ரூ.1 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்படும்.

வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் ராமநாதபுரம் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தை வேறு கட்டடத்துக்கு மாற்றி ரூ.1 கோடி செலவில் காட்சியமைக்கப்படும் என்றாா் அவா்.