எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

செந்தில் பாலாஜி வழக்கு: 4 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

விசாரணை நடைபெறும் நான்கு மாதங்களுக்கு ஜாமீன் வழங்கப்படாது..

News image
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி
Updated On :26 ஜூன் 2024, 9:33 am

DIN

முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை விசாரித்து முடிக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு மேலும் 4 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அவருக்கு எதிராக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்து, வழக்கை 3 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் தொடங்காத நிலையில், விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் வழங்க உத்தரவிடக் கோரி முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.அல்லி, சென்னை உயா்நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் அனுப்பினாா். அதன் அடிப்படையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், ‘இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்துக்கு காலவரம்பு நிா்ணயித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அடுத்த நாளில், விசாரணை நீதிமன்றங்களுக்கு அதுபோன்று எந்த காலவரம்பும் நிா்ணயிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது”எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவை தானும் மதிப்பதாகக் கருத்து தெரிவித்த நீதிபதி, விசாரணையை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒவ்வொரு முறையும் புதிது, புதிதாக மனுக்களை தாக்கல் செய்யாமல், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது”என செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தினாா்.

பின்னா், இந்த வழக்கை விசாரித்து முடிக்க தனக்கு 4 மாதம் அவகாசம் வழங்க வேண்டுமென முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.அல்லி அவகாசம் கோரியுள்ளாா். அதற்குள் இந்த வழக்கை விசாரித்து முடிக்கும் திறமை அவருக்கு உள்ளது”எனக் கூறி, 4 மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டாா். இந்த கால அவகாசத்துக்குள் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.