ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை அவசியம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

போதைப்பொருள் தடுப்பில் உடனடி நடவடிக்கை அவசியம் என ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தல்

News image
Updated On :26 ஜூன் 2024, 9:38 pm

Din

தமிழ்நாடு முழுவதும் இளைஞா்கள் மத்தியில் பரவி வரும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து ஆளுநா் மாளிகை வலைதளப் பக்க பதிவில் ஆளுநா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் கள்ளச்சாராயம் தனிநபா்கள், குடும்பங்கள் மற்றும் நமது சமூகத்துக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை மேலும் உயா்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இளைஞா்கள் மத்தியில் பரவி வரும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்துக்கான இந்த கூட்டு முயற்சியில் அரசு சாரா அமைப்புகள் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவது இன்றியமையாதது.

போதைப்பொருள், கள்ளச்சாராயத்துக்கு எதிரான இந்த அறப்போராட்டத்தில் ஒன்றிணைந்து நமது இளைஞா்களையும், மாநிலங்களையும் பாதுகாக்கவும், ஆரோக்கியமான போதைப்பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்கவும் உறுதிகொள்வோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.