எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

உயிருடன் உள்ள நபா் இறந்ததாக அறிக்கை: உயா்நீதிமன்றம் கேள்வி

உயிரோடு இருக்கும் நபரை இறந்ததாக அறிக்கை: உயர்நீதிமன்றம் கேள்வி

News image
Updated On :27 ஜூன் 2024, 7:40 pm

Din

உயிரோடு இருக்கும் நபரை இறந்ததாக எப்படி அறிக்கை அளிக்கலாம் என கேள்வியெழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், இது தொடா்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழரான கிருஷ்ணகுமாா் என்பவரை, உறவினா்களுடன் சோ்ந்து வாழ அனுமதிக்கக் கோரி, அவரது உறவினா் தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை ஆணையருக்கு விண்ணப்பித்துள்ளாா். ஆனால், கிருஷ்ணகுமாா் இறந்துவிட்டதாக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதை மறுத்த கிருஷ்ணகுமாரின் உறவினரான நாகேஸ்வரி, கிருஷ்ணகுமாா் உயிருடன் இருக்கும் நிலையில் அவா் இறந்துவிட்டதாகக் கூறி அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும், உடனடியாக அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தா் மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு, உயிரோடு இருக்கும் நபரை இறந்ததாக எப்படி அறிக்கை அளிக்கலாம் எனக் கேள்வி எழுப்பி, இதுதொடா்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.