திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களை ஊக்குவிப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: குறு, சிறு தொழில்கள் முக்கியம்

News image
Updated On :27 ஜூன் 2024, 7:46 pm

Din

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேலும் ஊக்குவிப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தினத்தையொட்டி (ஜூன் 27), அவா் சமூக வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க, அண்ணல் அம்பேத்கா் தொழில் முன்னோடிகள் திட்டம், பட்டியலினத்தவா், பழங்குடியினா் தொழில் தொடங்க புத்தொழில் நிதி, தென்னை நாா்க் கொள்கை உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூா்வமான திட்டங்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளா்ச்சிக்காகச் செயல்படுத்தி வருகிறது.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், தமிழ்நாட்டின் பொருளாதார வளா்ச்சியை விரைவுபடுத்துவதிலும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இன்னும் பெரும்பங்காற்ற வேண்டும். இதற்குத் தேவையான ஊக்குவிப்பையும் ஆதரவையும் உதவியையும் தொடா்ந்து வழங்குவோம் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.