

தமிழகத்தில் மாவட்டந்தோறும் போதை மீட்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஜூன் 28) காலை 9.30 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதங்களுக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலளித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
"சென்னை கே.கே. நகரில் ரூ. 50 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்டும். கிண்டி மற்றும் தஞ்சையில் ரூ. 250 மதிப்பில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்படும்.
தமிழகத்தில் புதிதாக 100 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய வலியுறுத்தப்படும். தமிழகத்தில் மாவட்டந்தோறும் போதை மீட்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும்" என்று அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.