
தமிழ்நாட்டில் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூலை 1 முதல் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது.
இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் 305 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2024 - 2025-ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, ஜூலை 1 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூலை 1 முதல் நடைபெற உள்ளது.
தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு மாணவர்கள் தங்கள் அசல் கல்விச் சான்றிதழ்களுடன் நேரடியாகச் சென்று விருப்பமான தொழிற்பிரிவை தெரிவு செய்து சேர்ந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கடந்த காலங்களில் பயிற்சி பெற்றவர்காளில் 80 சதவிகிதம் பேர், பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும், இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்சாலைகளுக்கு தேவையான பல நவீன தொழிற்பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் கூடுதல் தகவல் மற்றும் சந்தேககங்களுக்கு, 94990 55689 என்ற வாட்ஸ் அப் மற்றும் அலைபேசி எண்ணில் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.