48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் ஜூலை 31 வரை பகுதியளவில் ரத்து

விழுப்புரத்திலிருந்து தினமும் காலை 5.35 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் ஜூலை 31 வரை பகுதியளவில் ரத்து

News image
Updated On :29 ஜூன் 2024, 12:58 pm

விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில், ஜூலை 31-ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தெற்கு மத்திய ரயில்வே எல்லைக்குள்பட்ட திருப்பதி ரயில் நிலையத்தில், பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக விழுப்புரம் - திருப்பதி இடையேயான ரயில் சேவை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரத்திலிருந்து தினமும் காலை 5.35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் -திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண் 16854), ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை காட்பாடி - திருப்பதி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும்.

எதிர்வழித்தடத்தில், திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி - விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வ.எண் 16853), திருப்பதி -காட்பாடி இடையே ஜூலை 1 முதல் 31-ஆம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.40 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.