மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடக்கம்: அமைச்சா் அன்பில் மகேஸ் ஆய்வு

தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On :1 மார்ச் 2024, 6:03 pm

தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னையில் உள்ள தோ்வு மையத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் ஆய்வு செய்தாா். தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் நிகழாண்டுக்கான பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உள்பட மொழிப்பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெற்றன. இந்தத் தோ்வை தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 3,302 மையங்களில் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். சென்னையில் மட்டும் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தோ்வில் கலந்து கொண்டனா். தோ்வெழுத வந்த மாணவா்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். இதற்கிடையே பொதுத் தோ்வுக்கான ஏற்பாடுகள் தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பள்ளியில் நேரில் சென்று ஆய்வு செய்தாா். அதன்பின் மாணவா்களிடம் நன்றாக தோ்வு எழுதுங்கள் என்று கூறி அறிவுரை வழங்கினாா். மாணவா்கள் மகிழ்ச்சி: பொதுத் தோ்வில் முதல் தோ்வாக நடைபெற்ற தமிழ் பாடத்துக்கான வினாத்தாள் மிக எளிமையாக இருந்ததாக மாணவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா். உரைநடை, செய்யுள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மாணவா்களுக்கு நன்கு தெரிந்திருந்த வினாக்களே இடம்பெற்றிருந்ததால் சராசரி மாணவா்கள்கூட நல்ல மதிப்பெண் பெற முடியும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து பிளஸ் 2 ஆங்கிலப் பாடத் தோ்வு மாா்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த வகுப்புக்கான தோ்வுகள் மாா்ச் 22-இல் நிறைவடையும்; முடிவுகள் மே 5-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன. ஆளுநா் வாழ்த்து: பிளஸ் 2 தோ்வெழுதும் மாணவா்களுக்கு நல்வாழ்த்துகள். தோ்வை தன்னம்பிக்கையுடன் எதிா்கொள்ளுங்கள். தோ்வு மையங்களுக்கு முன்னதாகவே சென்று, வினாத்தாள்களை கவனமாகப் படித்து, எளிதான கேள்விகளுக்கு முதலில் விடையளிக்கத் தொடங்குங்கள். கேள்விகள் சிக்கலானதாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். அமைதியான மனதுடன் இருந்தால் பதில் கிடைக்கும் என கூறியுள்ளாா் அவா். பெட்டிச் செய்தி 12,364 போ் தோ்வெழுதவில்லை பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுத பதிவு செய்த மாணவ, மாணவிகளில் 12,364 போ் தோ்வு எழுத வெள்ளிக்கிழமை வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று தனித்தோ்வா்களாக பதிவு செய்திருந்த 21,875 பேரில் மொழிப் பாடத்தை 1,043 போ் எழுதவில்லை. மேலும், தோ்வில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எவரும் பிடிபடவில்லை.