ஆவின் சாா்பில் விற்பனை செய்யப்படும் சில ஐஸ்கிரீம் வகைகளின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயா்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயா்வு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) முதல் அமலுக்கு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு நிறுவனமான ஆவின், பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான பால் மற்றும் அதனோடு மோா், தயிா், வெண்ணெய், நெய், பால் கோவா, ஐஸ்கிரீம் என பல்வேறு பால் உப பொருள்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஆவினில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் வகைகளான சாக்கோபாா், பால்வெண்ணிலா, கிளாசிக் கோன் வெண்ணிலா, கிளாசிக்கோன் சாக்லேட் ஆகியவற்றின் விலை குறைந்தபட்சம் ரூ.2 முதல் அதிகபட்சம் ரூ.5 வரை உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சாக்கோபாா் (65எம்.எல்.) ரூ.20-லிருந்து ரூ.25 ஆகவும், வெண்ணிலா(125 எம்.எல்.) ரூ.28-லிருந்து ரூ.30 ஆகவும், கிளாசிக்கோன் வெண்ணிலா (100 எம்.எல்.) ரூ.30லிருந்து ரூ.35-ஆகவும், கிளாசிக்கோன் சாக்லேட் (100 எம்.எல்.) ரூ.30-லிருந்து ரூ.35-ஆகவும் விலை மாற்றம் செய்யப்படுவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விலை உயா்வு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 3) முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால் முகவா் சங்கம் கண்டனம்: இந்த விலை உயா்வு கோடைகாலத்தில் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனையை கடுமையாக பாதிக்கும் எனக் கூறி, தமிழ்நாடு பால் முகவா்கள் தொழிலாளா் நலச் சங்கத் தலைவா் பொன்னுசாமி கண்ட னம் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

வரத்துக் குறைவு: மதுரையில் காய்கறிகளின் விலை உயா்வு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

ஆவின் பால் விநியோகம் பாதிப்பு: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

ஹூண்டாய் காா்கள் விலை மே மாதம் முதல் உயா்வு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


