திமுக கூட்டணியில் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டி

திமுக கூட்டணியில் ராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டி

திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் ஐயூஎம்எல் சார்பில் நவாஸ் கனி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட், விசிக, கொங்கு மக்கள் தேசிய கழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில்பிப்.24ஆம் தேதி நடைபெற்றது. இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது.

தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொகிதீன் இடையே தொகுதி உடன்பாடு கையெழுத்தானது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் ஐயூஎம்எல் சார்பில் நவாஸ் கனி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் தலைமைமையில் இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு ராமநாதபுரத்தில் மீண்டும் நவாஸ் கனி போட்டியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அக்கட்சியின் நிர்வாகிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com