ரயிலில் மயிலாடுதுறை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின் மயிலாடுதுறை பயணம் - புதிய மாவட்ட அலுவலகம் திறப்புக்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்
ரயிலில் மயிலாடுதுறை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின் சென்னை எழும்பூரிலிருந்து, திருச்செந்தூர் விரைவு ரயிலில் மயிலாடுதுறை இன்று புறப்பட்டார்.

தமிழகத்தின் 38-வது மாவட்டமாக உதயமான மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை 114.48 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்காக கடந்த 2022ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தரைதளம் மற்றும் 7 அடிக்குமாடி தளங்கள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது. இதன் மொத்த பரப்பளவு 2,80,018 சதுர அடி. மொத்தமுள்ள 21.17 ஏக்கா் பரப்பளவில் 15.24 ஏக்கரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளன.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை எழும்பூரிலிருந்து விரைவு ரயிலில் மயிலாடுதுறை இன்று புறப்பட்டார்.

ரயில் நிலையத்தில் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு, முதல்வரை வழியனுப்பி வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com