கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களை நம்பிதான் பாஜக அரசியல் செய்கிறது: ஜெயக்குமார்

News image
Updated On :3 மார்ச் 2024, 9:22 am

DIN

தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களை நம்பிதான் பாஜக அரசியல் செய்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை ராயபுரத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மக்களவைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறுவோம். அதிமுக தலைவர்களின் முகங்களை பாஜக எதற்கு முன்னிலைப்படுத்த வேண்டும். இதற்கு பாஜக வெட்கப்பட வேண்டும். பாஜக தலைமை மீது நம்பிக்கை இல்லை என்ற நிலையை இது காட்டுகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் முகங்கள் அதிமுகவுக்கு தான் சொந்தம், அவர்களின் முகங்களை காட்டி ஓட்டு வாங்க நினைக்கும் அரசியலை பாஜக தற்போது கையில் எடுத்துள்ளது.

இது கண்டனத்திற்குரிய செயலாகும். திருச்சி மாநாட்டில் காலி சேர்கள் மத்தியில் அண்ணாமலை பேசுகிறார். தமிழ்நாட்டில் செல்ப் எடுக்காத கட்சி பாஜக மட்டும் தான். டாஸ்மாக் காலி பாட்டில்கூட காசு பார்க்கிற கட்சி திமுக. பிரதமர் மோடியின் வருகையால் தமிழ்நாட்டில் எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜக பூஜ்ஜியம் தான். தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களை நம்பிதான் பாஜக அரசியல் செய்கிறது.

பாஜக பிரதானமாக தமிழ்நாட்டில் பேசு பொருள் கிடையாது. அதிமுகவை யாராலும் உருட்டவோ மிரட்டவோ முடியாது. அதிமுகவுக்கு என தனித்தன்மை உள்ளது, யாரையும் நம்பி இல்லை. மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக இடையே தான் போட்டி, களத்தில் இல்லாத பாஜக என்ற கட்சியை பற்றிய பேச்சுக்கே இடமில்லை. அதிமுக கூட்டணிக்கு விசிக தலைவர் திருமாவளவன் வந்தால் வரவேற்போம். வராவிட்டாலும் கவலையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.