கல்பாக்கம் அதிவேக ஈனுலை திட்டம்: பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்!

கல்பாக்கம் அதிவேக ஈனுலை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார்.
கல்பாக்கம் அதிவேக ஈனுலை திட்டம்: பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்!

அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக இன்று (மார்ச். 4) சென்னை வந்தடைந்தார்.

மகராஷ்டிரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு சென்றார்.

பின்னர், கல்பாக்கம் அதிவேக ஈனுலை திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார். தொடர்ந்து, பாவினி (பாரதிய நபிகியாவித்யுத் நிகம் லிமிடெட்) நிறுவனம் உருவாக்கியுள்ள 500 மெகாவாட் திறன் கொண்ட வேக ஈனுலையின் 'கோர் லோடிங்' பணியை பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கவுள்ளார்.

கல்பாக்கம் அதிவேக ஈனுலை திட்டம்: பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்!
தேர்தல் சூறாவளி? 10 நாள்களில் 12 மாநிலங்களுக்குச் செல்லும் மோடி!

பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி, சட்டம், ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து மற்றும் சிறப்பு பிரிவுகளின் காவல் அதிகாரிகள், ஆயுதப்படை, கமாண்டோ உள்பட 15 ஆயிரம் போலீஸார் 5 அடுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நடைபெறவுள்ள சென்னை நந்தனம் ஒஎம்சிஏ மைதானம், சென்னை விமான நிலையம் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், பிரதமர் செல்லும் வழிகள் என பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை பயணத்தை முடித்துக் கொண்டு இன்றே அவர் மீண்டும் தெலங்கானா மாநிலம் புறப்பட்டுச் செல்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com