தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இந்தியாவிலேயே அதிக அளவு போதைப் பொருள் குஜராத்தில்தான் பறிமுதல்: ஆர்எஸ். பாரதி

News image
Updated On :4 மார்ச் 2024, 7:41 am

DIN

இந்தியாவிலேயே அதிக அளவு போதைப் பொருள் குஜராத்தில்தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று திமுக அமைப்புச்செயலர் ஆர்எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கடலூரில் அளித்த பேட்டியில், அரசியல் நெருக்கடி காரணமாக திமுக மீது போதைப்பொருள் குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி சுமத்துகிறார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என்ன என்பதை ஈபிஎஸ் தெளிவுப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளாக குட்காவை பரப்பியது அதிமுகதான்.

அதிமுகவின் குட்கா விவகாரத்தை திசை திருப்பவே அக்கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய டிஜிபி மீது எடப்பாடி பழனிசாமி என்ன நடவடிக்கை எடுத்தார்?. போதைப் பொருள் புகாருக்கு உள்ளானதும் திமுகவில் இருந்து சம்மந்தப்பட்டவர் நீக்கப்பட்டார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுகவின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டை ஒழிக்க வேண்டும், அழிக்க வேண்டும் என்பதற்காகவே கல்பாக்கம் ஈனுலைத் திட்டம். இத்திட்டம் ஆபத்தானது என்பதால் அதுதொடர்பான விழாவில் முதல்வர் பங்கேற்கவில்லை. தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருப்பது போல் அண்ணாமலை கூறுகிறார்.

அதானி துறைமுகத்தில் இருந்துதான் அதிக போதைப்பொருள் வெளியே வருகிறது. இந்தியாவிலேயே அதிக அளவு போதைப் பொருள் குஜராத்தில்தான் பறிமுதல். போதைப்பொருளின் மையமாக பாஜக ஆளும் மாநிலங்கள் உள்ளன என்றார். போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக இன்று அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் நிலையில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.