
மக்களவைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும், சைக்கிள் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் 21 தொகுதிகளுக்கு விருப்ப மனு பெறப்பட்டு வருவதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது.
மக்களவைத் தோ்தல் தொகுதி பங்கீடு தொடா்பாக தமாகா தலைவா் ஜி.கே.வாசனை, பாஜக குழுவினா் சனிக்கிழமை நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினர்.
பாஜக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரான பொன்.ராதாகிருஷ்ணன், நயினாா் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் ஆழ்வாா்ப்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் இல்லத்துக்கு வருகை தந்து, ஜி.கே.வாசனை சந்தித்து அந்தக் குழுவினர் பேச்சுவாா்த்தை நடத்தினர்.
பாஜகவிடம் 4 மக்களவைத் தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவைத் தொகுதியையும் தமாகாவினர் கேட்டுள்ளனர்.
மக்களவைத் தோ்தலில் தமாகா சாா்பில் போட்டியிட விரும்புவோா் மாா்ச் 4, 5 ,6 ஆகிய தேதிகளில் கட்சி அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.