புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சென்னை அருகே ரயில்வே கேட் சேதம்: ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்!

சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயில்வே கேட் சேதமடைந்ததால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்.

News image

ரயில்கள் நிறுத்தம்

படம்: எக்ஸ்

Updated On :6 மார்ச் 2024, 5:45 am

DIN

சென்னை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் அருகே வேன் மோதியதில் ரயில்வே கேட் புதன்கிழமை காலை சேதமடைந்தது.

இதனால், சென்னை - செங்கல்பட்டு, செங்கல்பட்டு - சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.

சுமார் 2 மணிநேரத்துக்கு மேலாக ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் வேலைக்குச் செல்லும் பயணிகள், மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பல பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி அருகேவுள்ள பேருந்து நிறுத்தத்துக்கு நடந்து சென்று பேருந்திலும், ஆட்டோக்களிலும் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.