ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

‘நாங்கள் நலமா இல்லை’: இபிஎஸ் விமர்சனம்

‘சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின் கட்டணம் உயர்ந்து விலைவாசி விண்ணைத் தொட்டுவிட்டது.’

News image
எடப்பாடி பழனிசாமி
Updated On :6 மார்ச் 2024, 7:27 am

DIN

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்த ‘நீங்கள் நலமா’ திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழக அரசு அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அறிந்துகொள்வதற்கான நீங்கள் நலமா என்ற திட்டத்தையும், அதற்காக உருவாக்கப்பட்ட வலைத்தளத்தையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.

இதனை விமர்சித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட பதிவில்,

“நலத் திட்டங்கள் நின்றுவிட்டது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. சொத்துவரி, வீட்டுவரி, குடிநீர் வரி, மின்கட்டணம் உயர்ந்துவிட்டது. விலைவாசி விண்ணைத் தொட்டுவிட்டது.

எங்கு காணினும் போதைப்பொருள் புழக்கம் என்ற அவலநிலைக்கு தமிழ்நாடு ஆளாகிவிட்டது. இப்படி, வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்ட உங்கள் ஆட்சியில் மக்கள் நலமாக இல்லை. நாங்கள் நலமா இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.