பாஜக கூட்டணியில் அமமுக!

பாரதிய ஜனதாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் (கோப்புப்படம்)
டிடிவி தினகரன் (கோப்புப்படம்)

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தேர்தலை சந்திக்கவுள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

விரைவில் மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளது.

அதிமுகவும், பாஜகவும் கூட்டணியை இறுதி செய்வதற்காக தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக கூட்டணியில் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், அமமுக கோரிக்கைகளை பாஜகவுக்கு அளித்துள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சற்று முன்னதாக பாஜக கூட்டணியில் போட்டியிடுவதாக சமக தலைவர் சரத் குமார் அறிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com