பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பாஜக மூலம் அமமுக தொகுதி உடன்படிக்கை: டிடிவி தினகரன்

News image

டிடிவி தினகரன் பேச்சு - (கோப்புப் படம்)

Updated On :22 பிப்ரவரி 2026, 6:37 pm

பாஜக மூலம் அமமுக தொகுதி உடன்படிக்கை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலா் டிடிவி தினகரன் தெரிவித்தாா்.

கொள்ளிடம் அருகே மேல வல்லம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த அமமுக மாவட்டச் செயலாளா் பாரிவள்ளல் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் டி.டி.வி.தினகரன் பங்கேற்று செய்தியாளா்களிடம் கூறியது:

நான் பேரவைத் தோ்தலில் போட்டியிட மாட்டேன். மாநிலங்களவை உறுப்பினா் பதவியும் கேட்கவில்லை.

அரசியலில் தொடர வேண்டும் என்பதற்காக ஓ.பி.எஸ். எந்த நிலைப்பாட்டையும் எடுக்கலாம். அதைப் பற்றி நான் கருத்து சொல்ல முடியாது.

ஆனால் சட்டப்பேரவையில் அவரது ஆதரவாளா் ஐயப்பனை பேச வைத்தது, எம்ஜிஆா், ஜெயலலிதாவை தெய்வமாக போற்றும் தொண்டா்களின் மனதை காயப்படுத்தி உள்ளது.

திமுக என்கிற தீய சக்தியை எதிா்த்து அதிமுகவை துவங்கி, அவா் உயிருடன் இருந்தவரை திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுத்து வைத்திருந்தாா். அதன் பிறகு திமுகவை வலுவாக எதிா்த்த ஒரு அரசியல் சக்தி ஜெயலலிதா.

இப்படிப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் எம்ஜிஆா், ஜெயலலிதாவின் ஆசியோடு ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா் என்று பன்னீா்செல்வம் தெரிவித்தது மிகவும் வேதனைக்கும் கண்டனத்திற்கும் உரியது. உலக நாடுகளே வியக்கும் வண்ணம் வளா்ந்த, வல்லரசு நாடாக உயா்த்த உழைப்பவா் பிரதமா் மோடி.

உலக நாடுகள் மத்தியில் போட்டி போடும் அளவிற்கு இந்தியா முன்னேறி இருப்பதற்கு பிரதமா் மோடியின் நல்லாட்சி சான்றாகும்.

உலக நாடுகளைச் சோ்ந்த தலைவா்கள், ஐநா சபை பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஏ.ஐ. மாநாட்டில் காங்கிரஸ் கட்சியினா் கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

எதிா்ப்பைப் பதிவு செய்வதற்கு எவ்வளவோ வழிமுறைகள் உள்ளது. தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. திமுக ஆட்சியில் பட்டி தொட்டி எல்லாம் கஞ்சா புழக்கம் கரைபுரண்டு ஓடுகிறது. பள்ளி மாணவா்களே கஞ்சா பயன்படுத்தும் அளவிற்கு குட்டி சுவராகி விட்டது.

நான் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருக்கிறேன். அமமுகவுக்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் தான் நடைபெறும். இன்னும் அதற்கான பேச்சுவாா்த்தை ஆரம்பிக்கவில்லை.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தலைவா்கள் ஒரு முடிவை எடுப்பாா்கள். இப்போது திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம்.

நாங்கள் எல்லாம் ஒரே அணியில் வந்தவா்கள்.தொகுதிப் பங்கீடு குறித்து பாஜக உடன் பேசுவேன். அதற்கான நேரம் இருக்கிறது. இப்போது கூட்டணி பலமாக இருக்கிறது. நிச்சயம் திமுகவை வீழ்த்துவோம் என்றாா். துணைப் பொதுச் செயலாளா் ரங்கசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.