மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிப்பு!

மொழிபெயர்ப்பிற்கான சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிப்பு!

தமிழ் உள்பட 24 மொழிகளைச் சோ்ந்த படைப்பாளா்களுக்கு சாகித்திய அகாதெமி விருதுகள் இன்று(மார்ச். 11) அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மமாங் தய் எழுதிய தி பிளாக் ஹில் என்ற புத்தகத்தை தமிழில் கருங்குன்றம் என்ற பெயரில் புத்தகமாக மொழிபெயர்த்ததற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 24 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்த 24 மொழிபெயர்ப்பாளர்களுக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகித்திய அகாதெமி விருது வென்றவர்களுக்கு ரூ. 50,000 ரொக்கப்பணம் விருது வழங்கும் விழாவில் வழங்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com