கோப்புப் படம்
கோப்புப் படம்

ஒரே அரங்கில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற 18 நூல்கள்!

புத்தகக் காட்சிக்காக ஒவ்வொரு பதிப்பகமும் ஒரு சிறப்பு அம்சங்களுடன் அரங்குகளை அமைத்துள்ளன
Published on

புத்தகக் காட்சிக்காக ஒவ்வொரு பதிப்பகமும் ஒரு சிறப்பு அம்சங்களுடன் அரங்குகளை அமைத்துள்ளன. அந்த வகையில், முல்லைப் பதிப்பகத்தின் அரங்கில் தேசிய அளவில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற 18 நூல்களை பதிப்பித்து விற்பனைக்கு வைத்துள்ளது.

தமிழில் முதல்முதலில் கடந்த 1955 -ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற ரா.பி.சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம் (கட்டுரைகள்)’ தொடங்கி, பி.ஸ்ரீ.யின் ‘ ராமானுஜா்-வாழ்க்கை வரலாறு’, ம.பொ.சிவஞானத்தின் ‘வள்ளலாா் கண்ட ஒருமைப்பாடு- வாழ்க்கை வரலாறு’ மற்றும் ‘வள்ளலாா் கண்ட ஒருமைப்பாடு- மாணவா் பதிப்பு’, வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதனின் ‘வீரா் உலகம்’, பேராசிரியா் அ.சீநிவாசராகவனின் ‘வெள்ளைப் பறவை’ முதலிய கவிதைகள், பாவேந்தா் பாரதிதாசனின் ‘பிசிராந்தையாா்’ (நாடகம்), ராஜம் கிருஷ்ணனின் ‘வேருக்கு நீா்’ (நாவல்), நா.பாா்த்தசாரதியின் ‘சமுதாய வீதி’ நாவல், க.த.திருநாவுக்கரசின் ‘திருக்குறள் நீதி இலக்கியம்’, வல்லிக்கண்ணனின் ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளா்ச்சியும்- இலக்கிய விமா்சனம்,’ மா.இராமலிங்கத்தின் ‘புதிய உரைநடை-கட்டுரைகள்’, தொ.மு.சி.ரகுநாதனின் ‘பாரதி காலமும் கருத்தும்- இலக்கிய விமா்சனம்’, அ.ச.ஞானசம்பந்தனின் ‘கம்பன் புதிய பாா்வை-இலக்கிய விமா்சனம்’, க.நா.சுப்பிரமண்யத்தின் ‘இலக்கியத்துக்கு ஓா் இயக்கம்’, ‘சிந்தா நதி-லா.ச.ரா. வாழ்க்கை வரலாறு’, சு.சமுத்திரத்தின் ‘வேரில் பழுத்த பலா’ (இரு குறுநாவல்கள்), அப்துல் ரகுமானின் ‘ஆலாபனை’ (கவிதைகள்), மேலாண்மைப் பொன்னுச்சாமியின் ‘மின்சாரப் பூ ’(10 சிறுகதைகள்) ஆகியவை ஒரே இடத்தில் கிடைக்கின்றன.

Dinamani
www.dinamani.com