ஜாஃபர் சாதிக்கை நேரில் சந்தித்துப் பேச அனுமதி

தில்லி உயர்நீதிமன்றம்​
தில்லி உயர்நீதிமன்றம்​

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாஃபர் சாதிக்கை சந்திக்க அனுமதியளித்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி இன்று மாலை 5-6 மணிக்குள் 30 நிமிடங்கள் சந்தித்துப் பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 3.,500 கிலோ ‘சூடோபெட்ரைன்’ எனும் போதைப் பொருளை இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக கடத்திய வழக்கில் திமுக முன்னாள் நிா்வாகி ஜாஃபா் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினா் (என்.சி.பி.) கடந்த சனிக்கிழமை தில்லியில் வைத்து கைது செய்தனா்.

இதையடுத்து, இந்த சா்வதேச போதைப்பொருள் கடத்தல் மோசடியை விசாரிக்க அமலாக்க இயக்குநரகம் ஜாஃபா் சாதிக் மீது சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேலும், அவா் மீது போதைப் பொருள் தடுப்புத் துறையினா் (என்.சி.பி.) போட்டுள்ள வழக்கு உள்பட பல எஃப்.ஐ.ஆா்.கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வழக்கு தொடா்பாக தமிழ் மற்றும் இந்தி திரைப்பட பைனான்சியா்கள், சில முக்கியப் பிரமுகா்கள் மற்றும் ஜாஃபா் சாதிக்கின் ‘அரசியல் நிதி’ தொடா்பான தொடா்புகள் தங்கள் கண்காணிப்பில் இருப்பதாக போதைப் பொருள் தடுப்புத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், ஜாஃபா் சாதிக் ரூ.7 லட்சத்தை இரண்டு முறை பரிவா்த்தனை செய்தது தொடா்பாக திமுகவின் மூத்த நிா்வாகியை போதைப் பொருள் தடுப்புத் துறை (என்.சி.பி.) விரைவில் அழைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com