இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்: நாளை மும்பை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ராகுலின் நடைப்பயணம் நாளை நிறைவுபெறுவதையடுத்து மும்பையில் நடைபெறும் இந்தியா பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலந்துகொள்கிறார்.
stalin
stalin

ராகுலின் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் நாளை(மார் 17)ல் நிறைவு பெறுவதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பை செல்கிறார்.

காங்கிரஸ் தலைமையிலான நடைப்பயணம் கடந்த ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கியது. தற்போது இந்த நடைப்பயணமானது மகாராஷ்டிரத்தில் நடைபெற்று வருகிறது.

ராகுலின் நடைப்பயணம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மும்பை தாதரில் உள்ள அம்பேத்கரின் நினைவிடத்தில் நிறைவு செய்ய உள்ளார். பின்னர் அன்று மாலை மும்பை சிவாஜி பூங்காவில் "இந்தியா" கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பை செல்கிறார்.

சென்னை விமானமான நிலையத்திற்குச் செல்லும் முதல்வர் ஸ்டாலின் நாளை காலை 9.40 மணிக்கு பயணிகள் விமானத்தில் பயணம் செய்கிறார். அதைத்தொடர்ந்து 11.45 மணிக்கு மும்பை விமான நிலையம் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இரவு 10 மணியளவில் மும்பையிலிருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com