காங்கிரஸுக்கு கரூர், குமரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

திருச்சி, ஆரணி, தேனிக்கு பதிலாக மயிலாடுதுறை, கடலூர், திருநெல்வேலி தொகுதிகள் ஒதுக்கீடு
காங்கிரஸுக்கு கரூர், குமரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கீடு!
ashwin

திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் காங்கிரஸுக்கு கரூர், கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், தமிழக காங்கிரஸ் கமிட்டு தலைவர் செல்வப்பெருந்தகையும் கடந்த வாரம் கையெழுத்திட்டனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடவுள்ள 9 தொகுதிகள் எவை என்பது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை 10 தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டார்.

திருவள்ளூர்(தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸுக்கு கரூர், குமரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கீடு!
அதிமுக - பாமக - தேமுதிக கூட்டணி உறுதி? மார்ச் 20-ல் ஒப்பந்தம்!

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி, ஆரணி மற்றும் தோல்வியுற்ற தேனி தொகுதிகளுக்கு பதிலாக மயிலாடுதுறை, கடலூர், திருநெல்வேலி தொகுதிகள் இந்த முறை ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com