பேரணி நிறைவு: குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி!

கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
பேரணி நிறைவு: குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி!

கோவை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பேரணி வாகனத்திலிருந்து இறங்கி காலணிகளை கழற்றிவிட்டு, உயிரிழந்தோரின் புகைப்படங்கள் அடங்கிய பதாகை முன்பு நின்று, பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக கோவை சாய்பாபா காலனியில் இருந்து பிரதமர் மோடியின் வாகனப் பேரணி தொடங்கியது. கங்கா மருத்துவமனை, வடகோவை, சிந்தாமணி வழியாக சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரம் பேரணி நடைபெற்றது. இறுதியாக ஆர்.எஸ்.புரத்தில் வாகனப் பேரணி நிறைவடைந்தது.

பேரணி நிறைவு: குண்டுவெடிப்பில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி!
மார்ச் 24 முதல் பிரசாரத்தை தொடங்குகிறார் இபிஎஸ்!

பிரதமர் மோடியின் வாகனப் பேரணியை வரவேற்கும் வகையில் சாலையின் இருபுறங்களிலும் பாஜக தொண்டர்கள் குவிந்து மலர் தூவி வரவேற்றனர். பாஜக தொண்டர்கள் பலர், மோடி.. மோடி.. என கோஷங்களை எழுப்பி உற்சாக வரவேற்பளித்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாகனப் பேரணியில் தமிழக பாஜக தொண்டர்கள் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ஒரு மணிநேரம் நடைபெற்ற பேரணி, ஆர்.எஸ். புரத்தில் நிறைவடைந்தது. அங்கு கோவை குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இரவு கோவை சர்க்யூட் ஹவுசில் தங்கும் பிரதமர் மோடி, செவ்வாய்க்கிழமை காலை கேரளம் புறப்படுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com