ஈரோடு அதிமுக வேட்பாளர் யார்?
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


ஈரோடு: ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக ஆற்றல் அசோக்குமார்(வயது 54) அறிவிக்கப்பட்டுள்ளார்.
அசோக்குமாரின் தந்தை பெயர் ஆறுமுகம். இவரது சொந்த ஊர் கொடுமுடி, புதுப்பாளையம் கிராமம்.
இவரின் தாயார் சௌந்தரம், திருச்செங்கோடு அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் ஆவார்.
இவரது மனைவி பெயர் கருணாம்பிகா. இவர் மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மகள் ஆவார். அஷ்வின்குமார், நிதின்குமார் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
பி.இ. எம்எஸ், எம்.பி.ஏ. படித்துள்ள ஆற்றல் அசோக்குமார் அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். தற்போது தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் சிபிஎஸ்சி பள்ளிகளை நடத்தி வருகின்றார்.
இது தவிர ஆற்றல் அறக்கட்டளை நடத்தி வருகின்றார். பாஜகவில் கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆற்றல் அசோக்குமார், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தற்போது ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளராக உள்ள நிலையில், ஈரோடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...