அரக்கோணம் திமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்
அரக்கோணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்

அரக்கோணம் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக ஜெகத்ரட்சகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் பெயர்: எஸ். ஜெகத்ரட்சகன்.

தொழில்: மருத்துவமனைகள், கல்லூரிகள் வைத்திருக்கும் இவர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் நடத்தி வருகிறார்.

தந்தை பெயர்: ஜி.சாமிக்கண்ணு.

பிறந்த தேதி: 15-08-1950

வகுப்பு: இந்து (வன்னியர்)

பதவிகள்

2009-12ஆம் ஆண்டில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சராகவும், 2012-13 ம் ஆண்டில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சராக இருந்தவர்.

1999-2004, 2009-2014, ஆகிய காலகட்டங்களிலும் 2019 முதல் தற்போது வரை 3 முறை அரக்கோணம் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

1984-89 செங்கல்பட்டு தொகுதி மக்களவை உறுப்பினராகவும், 1980-84 ல் உத்திரமேரூர் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

2004-ல் வீரவன்னியர் சங்க பேரவையை நிறுவி, ஜனநாயக முன்னேற்ற கழகம் எனப் பெயர் மாற்றி, பின்னர் 2009-ல் திமுகவில் இணைத்தார்.

இவரது மனைவி அண்மையில் காலமானார்.

மகன் - சந்தீப் ஆனந்த், மகள் - நிஷா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com