எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஈரோடு திமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

News image
ஈரோடு திமுக வேட்பாளர் கே.இ. பிரகாஷ்
Updated On :20 மார்ச் 2024, 9:05 am

DIN

ஈரோடு: ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக கே.இ. பிரகாஷ்(வயது 48) அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளரகவும், மேற்கு மண்டல பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

மொடக்குறிச்சி அடுத்துள்ள காணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இளங்கலை பொருளாதாரம் படித்துள்ள இவர் விவசாய குடும்ப பின்னணி கொண்டவர்.

தற்போது கெமிக்கல் வியாபாரம் செய்து வருகிறார். இவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி 1977-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கிளைச் செயலாளராக உள்ளார். இதனால் சிறுவயதிலேயே பிரகாஷ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பட்டதாரியான பிரகாஷின் மனைவி கோகிலா, திமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்துள்ளார். மகள் கன்யா, மகன் இனியன்.

இளைஞரணிக்கு தேர்தலில் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் கே.இ. பிரகாஷ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.